வன்முறைச் செயலைத் தடுக்க விரும்பும் ஹாங்காங் மக்கள்!

ஜெயா 2019-09-10 10:55:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 42ஆவது கூட்டம், செப்டம்பர் 9ஆம் நாள் ஜெனிவாவில் துவங்கியது. ஹாங்காங்கின் பல்வேறு துறைகளின் மகளிர் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஹேசாவ்ச்சொங் அம்மையாரும், கண்காணிப்பு ஆலோசகர் வூஷுச்சிங் அம்மையாரும், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 10 மற்றும் 11ஆம் நாட்களில் அவர்கள் முறையே உரை வழங்குகின்றனர்.

“ஹாங்காங்கின் உண்மை” என்ற தலைப்பில் ஹேசாவ்ச்சொங் அம்மையார் ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவுக்கு வழங்கிய உரைக்கான ஆவணத்தில், ஒரு சில தீவிரவாதிகளின் கருத்து, 75 இலட்சம் ஹாங்காங் மக்களின் கருத்தைப் பிரதிப்பலிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

9ஆம் நாள் ஹேசாவ்ச்சொங் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், வன்முறைச் செயல்களை வெகுவிரைவில் தடுத்து, சமூக ஒழுங்கை மீட்க ஹாங்காங் மக்கள் விரும்புவதாகத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்