5G பற்றிய ஹுவாவெய் வெளியிட்ட வெள்ளையறிக்கை

கலைமணி 2019-09-11 16:18:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச தொலைதொடர்பு கூட்டணி 10ஆம் நாள் புடாபெஸ்ட் நகரில் நடத்திய 2019ஆம் ஆண்டுக்கான பொருட்காட்சியில் 5G பயன்பாடு பற்றிய வெள்ளையறிக்கை ஒன்றை சீனாவின் ஹுவா வெய் நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு துறைகளில் 5G தொழில் நுட்பங்களின் பயன்பாடுகள் பற்றி இவ்வெள்ளையறிக்கை எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது. உலக பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் வரையறை ஒன்றிணைப்பையும் அலைவரிசை பரவலையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, 5G தொழில் நுட்பங்களின் பயன்பாட்டுக்கு உரிய மூலவளங்களையும் வணிக சூழலையும் வினியோகிக்க வேண்டும் என்று இவ்வெள்ளையறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இப்பொருட்காட்சியின் போது நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஹுவா வெய் நிறுவனத்தின் 5G துறையின் தலைமை இயக்குநர் யாங் சாவ் பின் பார்வையாளர்களிடம் 5G தொழில் நுட்பத்தின் எதிர்காலத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், தற்போது 5G தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகின்றது. உலகளவில் 20 நாடுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்கள் 5G தொழில் நுட்பத்தை வெளியிட்டுள்ளன. 2035ஆம் ஆண்டின் போது, உலகில் 5G தொழில் நுட்பம், 12 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பை உருவாக்கும் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்