சீன ஊடகக் குழுமத்தின் யாங்சி ஆற்றுக் கழிமுகத்திற்கான பிராந்தியத் தலைமையகம்

ஜெயா 2019-09-26 11:23:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமத்தின் யாங்சி ஆற்றுக் கழிமுகத்திற்கான பிராந்திய தலைமையகம் மற்றும் ஷாங்காய் தலைமையகம் செப்டம்பர் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், ஷாங்காய் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளருமான லீச்சியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியோங் முதலியோர், திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

8 கட்டிடங்களைக் கொண்ட யாங்சி ஆற்று கழிமுகப் பிராந்தியத் தலைமையகத்தின் மொத்த பரப்பளவு 2 இலட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டராகும். பதிப்புரிமை, விளையாட்டுத் தொழிற்துறை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மொழிப்பெயர்ப்பு, பண்பாட்டு நிகழ்ச்சி தயாரிப்பு உள்ளிட்ட அலுவல்கள் அங்கு நிறைவேற்றப்பட உள்ளன.

சீன ஊடகக் குழுமமும், ஷாங்காய் மாநகர அரசும், தேசிய அளவில் பல்வேறு மொழியிலான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மொழிப்பெயர்ப்புத் தளம் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்