சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் உரை

2019-10-01 11:15:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் சீனாவின் அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், இன்று சோஷலிச சீனா உலகின் கீழகில் தலைநிமிர்ந்து நிற்கிறது. சீனாவின் தகுநிலையை எந்த சக்கியும் அலைக்க முடியாது. சீன மக்கள் மற்றும் சீனத் தேசம் முன்னேறும் போக்கை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

சீனா தனது முன்னேற்றப் போக்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப் பின்பற்றி, மக்களே முதன்மை என்பதில் நிலைத்து நின்று, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தைக் கடைப்பிடித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தத்துவம், அடிப்படை நெறி, அடிப்படை நெடுநோக்கு ஆகியவற்றை பன்முகங்களிலும் செயல்படுத்தி, அருமையான வாழ்க்கை மீதான மக்களின் ஆர்வத்தை நிறைவேற்றி, புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

மேலும், அமைதியான ஒன்றிணைப்பு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை சீனா கடைப்பிடித்து, ஹாங்காங் மற்றும் மகௌவின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி, தைவான் நீரிணை இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்த ஷிச்சின்பிங், சீனர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சீன அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பேசிய போது, முன்னேற்றப் போக்கில் அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா எப்போதுமே நடைபோட்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் திறப்பு தொலைநோக்கைச் செயல்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மனிதகுலத்தின் வரலாற்றில் சீனாவின் கடந்த காலம் மிக முக்கியமானப் பதிவாகக் காணப்படுகிறது. சீனாவின் தற்காலம் மக்களின் முயற்சிகளோடு படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருப்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். மேலும், கட்சி உறுப்பினர்கள், படைவீரர்கள், தேசிய இனத்தவர்கள் அனைவரும் நெருக்கமாக ஒன்றுபட்டு, சீனத் தேசத்தின் மாபெரும் மலர்ச்சிக்கான கனவை நனவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்