ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வரும் புதிய வாய்ப்புகள்

வாணி 2019-10-05 17:20:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவ சீனாவின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், சீன மக்கள் உலக மக்களுடன் சேர்ந்து மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

நிதி நெருக்கடிக்குப் பின் உலகளவில் பொருளாதாரம் மந்தமான வளர்ச்சி நிலையில் சிக்கியிருந்ததன் பின்னணியில் ஷி ச்சின்பிங் 2013ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை முன்வைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் வழி மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு சீனா இடைவிடாமல் உயிராற்றலை வழங்கி வருகின்றது.

உலக வங்கி வழங்கிய அறிக்கைகளின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மூலம் பல்வேறு நாடுகளில் 76 இலட்சம் பேர் அதி வறுமை நிலைமையிலிருந்தும், 3 கோடியே 20 இலட்சம் பேர் நடுத்தர வறுமை நிலைமையிலிருந்தும் விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அவற்றின் வர்த்தகத் தொகையில் 2.8 விழுக்காடு முதல் 9.7 விழுக்காடு அதிகரிப்பு காணப்படும். உலக வர்த்தகம் 1.7 விழுக்காடு முதல் 6.2 விழுக்காடுவரை அதிகரிக்கும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் மூலம், கிழக்கு ஆப்பிரிக்காவில் முதலாவது உயர்வேக நெடுஞ்சாலையும், மாலத்தீவில் முதலாவது கடல் கடந்த பாலமும், பெலாரஸில் அந்நாட்டின் முதலாவது மகிழுந்து தயாரிப்பு நிறுவனமும், கசகஸ்தானில் அந்நாட்டுக்குரிய கடல் வழி நுழைவாயிலும் கட்டியமைக்கப்பட்டுள்ளன.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்