சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சீனாவின் முயற்சி

தேன்மொழி 2019-10-07 15:13:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட தரவுகளின்படி, 20 ஆண்டுகளுக்கு முந்தைய புவியுடன் ஒப்பிட்டால் இப்போது மேலும் பச்சையாக உள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மரம் நடுதல் காடு வளர்ப்பு மற்றும் ntensifiedAgriculture ஆகிய நடவடிக்கைகள், இவ்விளைவுக்கான காரணமாகும் என்று நாசா கூறியுள்ளது. 2000ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், முழு உலகளவிலும் பசுமைமயமாக்கத்தின் மொத்த அளவு, 25விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். இதில், சீனாவிலுள்ள தாவரங்களின் அதிகரிப்பு அளவு, உலகளவில் 25விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து, முதல் இடத்தில் உள்ளது. சீனாவின் பங்கு விகித்ததில், 42விழுக்காடு பகுதி, மரம் நட்டு காட்டை வளர்த்ததால் ஏற்படுத்தப்பட்டது.

மரம் நட்டு சூழலைப் பச்சைமயமாக்குவதில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள், ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட வரைவு அலுவலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன. சீனாவின் வடமேற்கு, ஹுவா பெய் மற்றும் வடக்கிழக்கு ஆகிய மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சான் பெய்எனும் பாதுகாப்பு வனங்களின் கட்டுமானத்துக்கு, உலகளவிலுள்ள பாலைவனப் பிரதேசங்களில் இயற்கைச் சூழல் பொருளாதாரத்துக்கான முன்மாதிரி என்ற பெருமையை இவ்வலுவலகம் வழங்கியது. இவ்வாண்டின் செப்டம்பர் திங்கள், புவி காவர் எனும் ஐ.நாவின் மீயுயர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதைச் சேர்ந்த ஊக்கம் மற்றும் நடைமுறை பெருமையை, சீனாவின் இணையம் மூலமான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமான எலும்பு காடு நிகழ்வு பெற்றுள்ளது. இத்துறையில் சீனா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இப்பெருமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரினச்சுற்றுச்சூழலை மேம்படுத்தி, தூய்மையான வளர்ச்சியை நனவாக்குவதில் சீனா பெற்றுள்ள சாதனைகள், அரசு நெடுநோக்கு பார்வையிலிருந்து பரவல் வேலை செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்காணிப்பு ஆற்றலை தொடர்ந்து அதிகரித்தல் முதலியவற்றுடன் இணைபிரியாதது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சீனாவின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. உயிரின வாழ்க்கை நாகரம் தொடர்பாக, அரசியல் அமைப்புச் சட்டத்திலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், இயற்கைச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக, 9 சட்டங்களையும் 20 விதிகளையும் சீனா அடுத்தடுத்து வகுத்து திருத்தியுள்ளது. காற்று, நீர், நிலம், இயற்கை சூழல், அணு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்த சட்டங்களும் விதிகளும் அடங்கியுள்ளன. தவிர, 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் கேட்டினை விளைவிக்கும் செயலுக்கு கடுமையாக ஒடுப்பதில் தெளிவான சாதனைகளைப் பெற்று வருகின்றது.

தவிரவும், சீனா பெற்றுள்ள பச்சையான வளர்ச்சி சாதனை, சீனர் பரந்த அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கெடுப்பதுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் வரை, ஐ.நாவின் விருதைப் பெற்ற எலும்பு காடு என்ற நடவடிக்கை, சுமார் 50கோடி சீனர்கள் கரி குறைந்த வாழ்க்கையில் பங்கெடுக்க செய்துள்ளது.

காலநிலை மாற்றம், மனித குலம் கூட்டாக எதிர்நோக்குகின்ற அறைக்கூவல் ஆகும். இயற்கை சூழல் கட்டுமானத்துக்கு, பல்வேறு நாடுகள் கூட்டாக பங்கெடுப்பது தேவைப்படுகின்றது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா எப்போது ஆக்கப்பூர்வமாக சர்வதேச ஒத்துழைப்பில் பங்கெடுத்து வருகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 30க்கும் அதிகமான பல தரப்பு பொது ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் சீனா ஏற்றுக்கொண்டு செயல்படுத்த துவங்கியுள்ளது. இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் நடைபெற்ற காலநிலை செயல் பற்றிய ஐ.நா உச்சி மாநாட்டில், ஐ.நா காலநிலை மாற்ற கட்டுக்கோப்பு பொது ஒப்பநதத்தையும் பாரிஸ் உடன்படிக்கையையும் உணர்வுப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதாக சீனா வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்