சீனாவின் தேசிய விழா விடுமுறையில் சுற்றுலா வருமானம் அதிகம்

வாணி 2019-10-07 16:07:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தேசிய விழா விடுமுறை நாட்களில் சீன மக்கள் பொதுவாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். புதிய புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து, 4ஆம் தேதி வரை, சீனாவின் சுற்றுலா நுகர்வு புதிய பதிவை எட்டியது. இந்த 4 நாட்களில், பல்வேறு பிரதேசங்களில் மொத்தம் 54 கோடியே 20 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.02 விழுக்காடு அதிகமாகும். மேலும், உள்நாட்டுச் சுற்றுலாத் துறையின் வருமானமும் கடந்த ஆண்டை விட 8.58 விழுக்காடு அதிகரித்து 45 ஆயிரத்து 263 கோடி யுவானை(ஒரு யுவானுக்குச் சுமார் 10 ரூபாய்) எட்டியது.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழுந்தில் கான்சூ, சிங்காய், சின்ச்சியாங், குய்சோ, சிச்சுவான், திபெத் முதலிய பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்