பெய்ஜிங் உலகத் தோட்டக்கலை பொருட்காட்சி நிறைவு

இலக்கியா 2019-10-08 16:20:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலகத் தோட்டக்கலை பொருட்காட்சியின் அமைப்புக் குழு 8ஆம் நாள் இறுதி செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இப்பொருட்காட்சி அக்டோபர் 9ஆம் நாளுடன் நிறைவடைகிறது. நிறைவு விழாவின் தலைப்பு, “அறுவடைக்குப் பாராட்டு”என்பதாகும். இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 93 இலட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுமார் 2 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகள் பொருட்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இப்பொருட்காட்சி நிறைவடைந்த பிறகு, உயிரினப் பண்பாட்டின் முன்மாதிரித் தளமாக இம்மண்டலம் உருவாக்கப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்