2019 உலகப் போட்டியாற்றல் அறிக்கை

வாணி 2019-10-09 19:12:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டியாற்றல் அறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் 9ஆம் நாள் ஜெனிவாவில் வெளியிட்டது.

உலகளவில் மொத்த போட்டியாற்றல் தரவரிசையில் சீனா கடந்து ஆண்டைப் போலவே தொடர்ந்து 28ஆவது இடத்தில் உள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் சீனா உலகின் முன்னணியிலுள்ள 10 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் எதிர்காலம் மீதான உறுதியற்ற மனப்பாங்கு, வர்த்தகத் திறப்புக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா இத்தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது.

இந்த தரவரிசையில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 99 விழுக்காட்டைக் கொண்ட 141 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடம்பெறுகின்றன. இதில் அடிப்படை வசதிகள், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் நிதானத் தன்மை, சந்தை அளவு, நிதிச் சந்தை, புத்தாக்க ஆற்றல் முதலிய 12 வகைகளைச் சேர்ந்த 103 பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்