சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்துக்கு உதவி வழங்கும் 5ஜி!

தேன்மொழி 2019-10-31 18:46:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு சீனச் சர்வதேசத் தகவல் செய்திதொடர்புக் கண்காட்சி அக்டோபர் 31-ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இக்கண்காட்சியில் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனாவின் மூன்று முக்கிய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவை சேர்ந்து, 5ஆவது தலைமுறை இணையத் தளம் வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்பட துவங்கியுள்ளதாக அறிவித்தன.

இவ்வாண்டின் இறுதிக்குள், சீனாவில் பயன்படுத்தப்படும் 5ஆவது தலைமுறை இணைய வினியோக நிலையங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30ஆயிரத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில், சீனாவின் மாவட்ட நிலைக்கு மேலான நகரங்களிலும் 5ஜி வணிகச் சேவை வழங்கப்படும்.

மேலும், சீனாவில் 10க்கும் மேற்பட்ட 5ஐ செல்லிடப் பேசிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு செல்லிடப்பேசியின் மிக குறைந்த விலை 3600யுவான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

5ஐ வணிகப் பயன்பாடு சீனாவில் அதிகாரப்பூர்வமாக வருவது, சீனாவின் நகரும் செய்தித் தொடர்புத் துறை உலகளவில் முன்னணியில் உள்ளதை காட்டுகின்றது. மதிப்பீட்டின்படி, 2020முதல் 2025ஆம் ஆண்டு வரை, 5ஜி வணிகப் பயன்பாட்டினால் சீனாவின் தகவல் செய்திதொடர்புத் துறையில் கொண்டு வரும் நுகர்வுத் தொகை 8இலட்சம் கோடி யுவானைத் தாண்டும். இது சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றும் என்று நம்புகின்றோம்.

தவிரவும், 5ஜி தொழில் நுட்பம் உள்ளிட்ட முன்னேறிய ஆய்வுச் சாதனைகளை பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள விரும்புவதாக சீனா பலமுறை தெரிவித்துள்ளது. உலக வளர்ச்சிக்குப் பொறுப்பான பெரிய நாடான சீனாவின் பங்களிப்பாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்