​புத்தாக்க ஆற்றலை கவனிக்கும் ஹொங் ஜியெள கருத்தரங்கு

தேன்மொழி 2019-11-07 16:54:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் முக்கிய பகுதியாக ஹொங் ஜியெள சர்வதேசப் பொருளாதாரக் கருத்தரங்கு ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டுள்ள 4000க்கும் மேற்பட்ட சீன மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை ஆதரிப்பது, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பது ஆகியவை குறித்து ஆக்கப்பூர்வமாக ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். மேலும், வணிகச் சூழல், செயற்கை அறிவுத்திறன், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், மின்னணு வணிக அலுவல், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம் முதலியவை குறித்தும் அவர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

திறந்த ஒத்துழைப்பு மூலம் மட்டுமே கூட்டு வெற்றியை நனவாக்க முடியும் என்பதை சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி முழுமையாக நிரூபித்துள்ளது.

திறந்த ஒத்துழைப்பை நனவாக்கும் வகையில், முதலில் வர்த்தகத் தடையை நீக்கி, வணிகச் சூழலை மேம்படுத்த வேண்டும். இராண்டாவதாக, கூட்டு வளர்ச்சியில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவதாக, புத்தாக்கத்தின் தலைமையில் உலகளவில் வளைந்து கொடுக்கும் வழிமுறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

2ஆவது சீனச் சர்வதேச இறுக்குமதிப் பொருட்காட்சியும், ஹொங் ஜியெள சர்வதேசப் பொருளாதாரக் கருத்தரங்கும், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை ஆதரிக்கும் வலிமை மிகுந்த ஆற்றலாக, உலகப் பொருளாதாரத்தைத் தாழ்ந்த நிலையிலிருந்து விடுவிப்பதற்கு உதவி அளிக்கும் என்று நம்புகின்றோம்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்