​குவாங் தோங்-ஹாங்காங்-மகெள பெரிய விரிகுடா பிரதேசத்திற்கான ஊடக மையம் திறப்பு

தேன்மொழி 2019-11-07 19:01:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த குவாங் தோங்-ஹாங்காங்-மகெள பெரிய விரிகுடா பிரதேசத்திற்கான ஊடக மையம் நவம்பர் 7-ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்மாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதோடு, பெரிய வரிகுடா வானொலியின் செயலியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் குவாங் தோங் மாநிலத்தின் கட்சி குழு செயலாளருமான லீசி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹெய் சியொங் முதலியோர், மையத்திறப்பு விழா மற்றும் செயலியின் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர்.

பெரிய விரிகுடா வானொலி, ஒலிபரப்பப்பட்ட கடந்த இரு திங்கள்களில், வானொலி மற்றும் புதிய ஊடகத்தின் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பல நேரலைகளை வழங்கி, அதிகளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்