​சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் உயர் தொழில் நுட்பத் தயாரிப்புகள்

தேன்மொழி 2019-11-08 17:52:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வரும் 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், உலகின் பல புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் தங்கள் உயர் தொழில் நுட்ப தயாரிப்புகளை முதன்முறையாக காட்சிக்கு வைத்தன. அவை, இப்பொருட்காட்சியில் கவனத்தை ஈர்க்கும் மையப் பகுதியாக இருந்தன.

உலகளவில் மிக முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதனைகள், ஆழ்ந்த முறையில் மக்களின் வாழ்க்கையை மாற்றும் அதே வேளையில், உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கு புதிய இயக்காற்றல் கொண்டு வருவது உறுதி.

அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், வளர்ச்சியின் முதன்மை இயக்கு ஆற்றலாக திகழ்கின்றது. சீனாவின் விரிவான சந்தையானது, உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பல தயாரிப்புகள் சீனச் சர்வதேச இறுக்குமதிப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யபட்டுவதற்கு காரணமாகும். அதோடு, தரமிக்க வளர்ச்சி என்ற நோக்கத்துடன் தொழில் துறையின் வளர்ச்சி முறை மாற்றம் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதவும், அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்துக்கு மேடையை உருவாக்கியுள்ளது.

தவிர, அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புடன் நெருக்கமாக இணைந்துள்ளது. உயர் தொழில் நுட்பத் தயாரிப்புகள் அதிகமாக இப்பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டமை, சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு மீதான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையைக் காட்டுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்