உலகப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீன ஞானத்தின் பங்கு

வாணி 2019-11-21 19:08:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019 புத்தாக்கப் பொருளாதார மன்றக் கூட்டம் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. 40க்கும் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500 பிரமுகர்கள் புதிய பொருளாதாரம் மற்றும் புதிய எதிர்காலம் பற்றியும், தற்கால உலகில் நிலவும் பெரிய அறைகூவல்களைச் சமாளிப்பது பற்றியும் கலந்தாலோசித்துள்ளனர். மேலாண்மை, நம்பிக்கை, அமைதி, வளர்ச்சி ஆகிய துறைகளில் தோன்றியுள்ள பற்றாக்குறை நிலைமையை நீக்க, சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து புதிய வழிமுறைகளைத் தேடிப்பார்க்க விரும்புவதாக சீன தரப்பு இக்கூட்டத்தில் தெரிவித்தது.

திறப்பு, ஒத்துழைப்பு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான மையக் கருத்துக்களாகும். பல்வேறு நாடுகள் இக்கருத்துக்களின்படி, அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான புதிய சுற்று வாய்ப்புகளை இறுகப்பற்றி, புதியப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீனா கருதுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்