அமெரிக்காவை சீனாவுடன் ஒப்பிட முடியுமா?

தேன்மொழி 2019-11-28 10:18:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜெர்மனிக்கான அமெரிக்கத் தூதர் கிரனெல் அண்மையில் கூறுகையில் ஒழுக்க நெறி தொடர்பாக சீனாவை அமெரிக்காவுடன் ஒரே நிலையில் ஒப்பிட முடியாது என்றார். இந்தக் கூற்று குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் 27-ஆம் நாள் கூறுகையில், ஒழுக்க நெறிப் பிரச்சினையில் சீனாவுடன் அமெரிக்காவை ஒப்பிட முடியாது தான் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முதலாவதாக, சீனா எப்போதும் உலகின் அமைதிக்குப் பங்காற்றி வருகின்றது. ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர அங்க நாடுகளில் சீனா அனுப்பியுள்ள அமைதிக்காப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இரண்டாவதாக, சீனா எப்போதும் உலகின் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றது. முழு உலகின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்புக்கான சீனாவின் பங்கு விகிதம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 34 விழுக்காடு என்ற அளவை நிலைநிறுத்தி வருகின்றது. கடந்த 70 ஆண்டுகளில் சீனா 166 நாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் 40 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கு மாறாக, அமெரிக்க என்ன செய்தது? எங்கெங்கும் அமெரிக்காவே முதலிடம் என்ற கோட்பாட்டையே அமெரிக்கா பின்பற்றி வருகின்றது. மேலும் அந்நாடு அடிக்கடி பிற நாடுகளின் மீது தன்னிச்சையான தடை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்று தெரிவித்தார்.

இதற்கு மாறாக, சீனா சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காப்பத்தில் எப்போது பங்காற்றி வருகின்து. தற்போதுவரை, அரசுகளுக்கிடையே நிறுவப்பட்ட 100க்கும் அதிகமான சர்வதேச நிறுவனங்களில் பங்கெடுத்துள்ள சீனா, 500க்கும் மேற்பட்ட பலதரப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளது. மாறாக, 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கத் தொடங்கியதுய யுனெஸ்கோ, ஐ.நா மனித உரிமைச் செயல்மன்றம், பாரிஸ் உடன்படிக்கை, ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை, நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளுக்குத் தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ரஷியாவின் ஒப்பந்தம் முதலியவற்றிலிருந்து அமெரிக்கா விலகியது என்று கெங் ஷுவாங் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்