உயர் பிரிதிறனுடைய செயற்கைக்கோளை சீனா ஏவுதல்

இலக்கியா 2019-11-28 10:52:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 28ஆம் நாள் சீனாவின் தை யுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் லாங் மார்ச்-4 சி ஏவூர்தி மூலம், உயர் பிரிதிறனுடைய “காவ் ஃபென்-12” செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அது திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது.

இச்செயற்கைக்கோள் அனுப்பும் தரைப்படத்தின் பிரிதிறன், சப்-மீட்டர் என்ற நிலையை எட்டியுள்ளது. நிலப்பரப்பின் கணக்கெடுப்பு, நகரத் திட்ட வரைவு, பயிர்களின் விளைச்சல் மதிப்பீடு, இயற்கை சீற்றத் தடுப்பு முதலிய துறைகளில் உயர் பிரிதிறனுடைய இச்செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்