2019:சீனாவில் ஒரு கோடி பேர் வறுமையிலிருந்து விடுவிப்பு

வாணி 2019-12-29 17:36:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு சீனாவில் ஒரு கோடி பேர் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மிகவும் வறுமை நிலைமை ஒழிப்பு மற்றும் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை முழுமையாக உருவாக்குவதென்ற உன்னதக் குறிக்கோளை நனவாக்குவதற்கான இறுதிக் கட்டத்தில் சீனா நடைபோட்டு வருகின்றது.

உலகளவில் ஐ.நாவின் ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நனவாக்கும் முதலாவது நாடான சீனா, வறுமை ஒழிப்புத் துறையில் வளரும் நாடுகளுக்கு சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றது. இது பன்னாடுகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

மின்னணு வணிகத் துறை வளர்ச்சியில் சீனாவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் உலக வங்கி கடந்த நவம்பர் திங்கள் ஓரறிக்கையை வெளியிட்டது. பொருளாதார அதிகரிப்பு, தொழில் புத்தாக்கம், வேலை வாய்ப்பு மூலம் வறுமை ஒழிப்பு, குடியிருப்புப் பிரதேசங்களின் மேம்பாடு முதலியவற்றில் சீன மின்னணு வணிகர்கள் முன்னேறிய அனுபவங்களைப் பெற்றுள்ளனர் என்றும் இது முழு உலகின் வளரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

தவிரவும், சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு தொடர்பான ஒத்துழைப்பு மூலம், தொடர்புடைய நாடுகளில் சுமார் 76 இலட்சம் பேர் தீவிர வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலக வங்கியின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டது.

உலகின் தொடரவல்ல வளர்ச்சியில் சீனா தொடர்ந்து அதிக பங்காற்ற முடியும் என்று நம்பப்படுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்