​ ஹாங்காங் ஒரு சிலரின் சதுரங்கக் காய் அல்ல

​ வாணி 2020-01-02 18:38:09
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் சில வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி கேரி லாம் அம்மையாருக்கு கடிதம் எழுதி, ஹாங்காங்கின் சுதந்திரம் மற்றும் சட்ட அமைப்பைக் குற்றஞ்சாட்டி, பன்னாட்டு சுதந்திர பரிசீலனை அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். ஹாங்காங் அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஹாங்காங்கின் உள் விவகாரத்தில் தலையிடும் இச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாங்காங் ஒரு சிலரின் சதுரங்கக் காய் அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டத்துக்குப் புறம்பான வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆர்பாட்டக்காளர்களின் மீது ஹாங்காங் காவற்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வது சர்வதேச மனித நேய வரையறைக்கு முற்றிலும் ஏற்றதாகும். எந்த ஒரு நாட்டிலும் வன்முறை செயல்கள் சகித்துக்கொள்ளப்பட முடியாதது என்று ஹாங்காங் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் ஹாங்காங்கில் சட்ட ஒழுங்கு தொடர்பான குறியீட்டு எண் 1996ஆம் ஆண்டில் சுமார் 60ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டில் 16ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. தாய்நாட்டுக்குத் திரும்பிய கடந்த 22 ஆண்டுகளில் ஹாங்காங் பெற்றுள்ள சாதனைகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்