சீனாவில் சுங்கத் தீர்வு காலம் குறைவு

பூங்கோதை 2020-01-13 19:17:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சுங்கத் தீர்வு காலம் 50 விழுக்காடு குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டிலுள்ள சுங்கத் தீர்வு காலத்துடன் ஒப்பிடும் போது, 50 விழுக்காட்டைக் குறைப்பது என்ற சீன அரசவையின் இலக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நனவாக்கப்பட்டுள்ளது.

மேலும், சுங்கத் தீர்வுத் தொகை பற்றி, சீனாவின் சுங்க துறை பல்வேறு தொடர்புடைய துறைகளுடன் இணைந்து கட்டண வசூலிப்பைக் கூட்டாக முறைப்படுத்தி, செலவைக் குறைப்பதை முன்னேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, உலக வங்கி வெளியிட்ட வணிகச் சூழ்நிலை பற்றிய அறிக்கையின்படி, கடந்த 2 ஆண்டுகளாக சீனாவில் எல்லை கடந்த வர்த்தக வசதியான அளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. சீனா ஜப்பானைத் தாண்டி, உலகளவில் 56வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்