சீனத் திபெத் பற்றிய அமெரிக்காவின் மசோதாவுக்கு ஆதாரமில்லை

வாணி 2020-01-30 16:58:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019 திபெத் கொள்கை மற்றும் ஆதரவு எனும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு சீன உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் சிலரின் சூழ்ச்சியை இது முற்றிலும் வெளிப்படுத்தியுள்ளது.

இதில் சில பகுதிகளைப் பார்ப்போம்.

தலாய் லாமாவின் வாரிசு திபெத் மரபுவழி புத்தமதக் குழுவால் மட்டும் உறுதிப்படுத்த முடியும் என்றும், தயாய் லாமாவின் மறுபிறப்பின் முடிவில் பங்கெடுக்கும் சீன அதிகாரிகளின் மீது அமெரிக்கா தடை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்தவாறு, திபெத் மரபுவழியில் வாழும் புத்தர்களின் மறுபிறப்பில் பின்பற்றப்பட வேண்டிய மத விதிகளும், வரலாற்று பழக்கங்களும் உள்ளன. இந்த விதிகள், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் சட்ட விதிகளைப் பார்த்தால், வாழும் புத்தரின் மறுபிறப்பின் முடிவை உறுதி செய்யும் அதிகாரம் நடுவண் அரசுக்கு உண்டு.

மேலும், லாசாவில் துணை நிலை தூதரகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்தது. உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் விதிகளைப் பார்ப்போம். பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் அதிகமாக நிகழும் இடம், குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் குழுமி வாழும் இடம் ஆகியவை ஒரு நாடு பிறநாட்டில் துணை நிலை தூதரகத்தை அமைப்பதற்கான இரண்டு இன்றியமையாத நிபந்தனைகளாகும். ஆனால், லாசாவில் அமெரிக்க இத்தகைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

திபெத் பண்டைக் காலம் தொட்டு சீனாவின் உரிமைப் பிரதேசமாகும். அமெரிக்காவின் புதிய மசோதாவுக்குத் தெளிவான ஆதாரம் ஒன்றும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.


(தகவல், சீன ஊடகக் குழுமம்)

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்