வைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்

தேன்மொழி 2020-02-09 19:19:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிர ரக கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க உலகச் சுகாதார அமைப்பு இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமல்ல, தவறான தகவலைப் பரப்பி, நோய் தடுப்புப் பணியைச் சீர்குலைக்க முயலும் இணைய சக்திகளுடனும் சதித் திட்டத்தை உருவாக்கியவர்களுடனும் போராட்டம் நடத்தி வருகின்றது என்று இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் டெட்ரோஸ் பிப்ரவரி 8-ஆம் நாள் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுகாதாரத் துறைப் பணியாளர்களின் பணிக்கு இத்தகைய பொய் தகவல்கள் இன்னல்களை அதிகரித்துள்ளதுடன், சமூகத்தில் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. பொய்யான தகவல் பரவுவதைத் தடுக்கும் வகையில், உலகச் சுகாதார அமைப்பு உண்மையான தகவலை வெளியிடும் குழுவை அமைத்துக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

நோய் தடுப்பின் முக்கிய காலத்தில், டெட்ரோஸ் வெளிக்காட்டிய மனப்பான்மையும் உலகச் சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் உரிய நடவடிக்கைகளும், பொய் தகவல் பரவுவதைத் தடுப்பதற்கும், நோய் தடுப்புப் பணியைச் சீர்குலைக்க முயலும் தீய சக்திகளின் தலையீட்டைத் தடுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

புதிய ரக கரோனா வைரஸ்பரவிய உடனே, வைரஸின் மரபணு தகவலை, உலகச் சுகாதார அமைப்பு மற்றும் இதர நாடுகளுடன் சீனா காலதாமதமின்றி பகிர்ந்து கொண்டது. அதோடு, தொற்று நோயின் நிலைமையை வெளிப்படையாக வெளியுலகிற்கு வெளியிட்டு, வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச சமூகத்தில் சீனாவின் செயல் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிலைமையில், சில மேலை நாடுகளின் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செயல்கள், சீனாவின் வைரஸ் தடுப்புப் பணியை அவமானப்படுத்தி உள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மற்றும் ஆசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் உரிமை நலன்களையும் மீறியுள்ளன. மேலும், சர்வதேச சமூகத்தில் வைரஸ் பரவலைக் கூட்டாக கையாள ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இது இடையூறாகவும் அமைந்துள்ளது.

நமது பூமியில், இத்தகைய வைரஸ்கள் தான், மனிதக் குலத்தின் கூட்டு எதிரி. சீனா பன்முகங்களிலும் கண்டிப்பான முறையிலும் மேற்கொண்டு வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் முயற்சி ஆகும். பல்வேறு நாடுகள் நியாயமான முறையில் நோய் பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து, தொடர்புடைய செய்திகளை வெளியிட்டு, தவறான எண்ணத்தை ஒழித்து, பொய் தகவலைத் தடுத்து, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்