சீன மருத்துவ அறிவியல் கழகத்தில் லீக்கெச்சியாங் ஆய்வுப் பயணம்

இலக்கியா 2020-02-10 10:27:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமை அமைச்சரும், கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் மத்திய அரசின் தலைவர்கள் குழுவின் முதன்மை தலைவருமான லீக்கெச்சியாங், 9ஆம் நாள் சீன மருத்துவ அறிவியல் கழகத்தின் உயிரியல் ஆய்வகத்தில் பயணம் மேற்கொண்டு, இவ்வைரஸ் தடுப்புப் பணியின் அறிவியல் ஆய்வுகளை அறிந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், இத்தடுப்புப் பணிக்கு, அனைவரின் ஒரு மனதான செயல்பாடு மட்டுமல்ல, அறிவியல் தொழில் நுட்பங்களின் ஆதாரமும் வேண்டும். சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி ஆய்வுக்கு, நிதி, பொருள் மற்றும் மனித வளம் உள்ளிட்ட ஆதரவையும் உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், முன்னணியில் கடினமாகப் பணியாற்றி வரும் அறிவியல் பணியாளர்களுக்கு லீக்கெச்சியாங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்