சீனாவில் அதிகரித்து வருகிறது முக உறைகள் மற்றும் உணவுகளின் உற்பத்தி

மதியழகன் 2020-02-10 10:45:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் முக உறைகள், உணவுப் பொருட்கள் ஆகியற்றின் உற்பத்தி தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 7ஆம் நாள் வரை, முக உறைகளின் உற்பத்தி திறன், 73 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தித் திறன், 94.6 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், இயற்கை வாயு, மின்னாற்றல், எண்ணெய் ஆகியவை போதுமான அளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு பயணியர் விமானம், தொடர்வண்டி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இயல்பாக இயங்கி வருகின்றன.

8ஆம் நாள், சீனாவின் 36 முக்கிய நகரங்களில், அரிசி, மாவு, சமையல் எண்ணெய் ஆகியவை இயல்பான விலையில் விற்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்