சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து

பூங்கோதை 2020-02-11 10:33:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிப்ரவரி 10ஆம் நாள் பேசுகையில், சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாக சீரான வளர்ச்சியடையும் போக்கில் இருந்து மாறாது. கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானதாகும் என்றார்.

மேலும், கரோனா வைரஸ் பரவலால், சீனப் பொருளாதார துறையில் ஏற்படும் பாதிப்பை முயற்சியுடன் குறைத்து, இவ்வாண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பல்வேறு இலக்குகளை நிறைவேற்ற வேண்டும். நிதி, மனித ஆற்றல் உள்ளிட்ட துறைகளில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி அளிக்கும். தவிர, மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமளித்து பணியைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்