வூகான் நகருக்கு கூடுதலாக 2600 மருத்துவப் பணியாளர்கள்

சரஸ்வதி 2020-02-13 15:50:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன இராணுவப் படை 13ஆம் நாள், கூடுதலாக 2600 மருத்துவப் பணியாளர்களை வூகான் நகருக்கு அனுப்பியுள்ளது. இந்நகரிலுள்ள டை காங் டோங் ஜி மருத்துவமனை, ஹூபெய் மாநில மகளிர் மற்றும் குழந்தை மருத்துவமனையின் குவாங் கூ பகுதி ஆகியவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இது வரை, சீன இராணுவப் படை மொத்தமாக 3 முறை சுமார் 4000 மருத்துவப் பணியாளர்களை வூகான் நகருக்கு அனுப்பி உள்ளது. அவர்கள், கனோரா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்