கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இயன்றளவு குறைக்கும் சீனா

2020-02-13 16:55:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்கும் திட்டம் மற்றும் 13வது 5 ஆண்டுகாலத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய இறுதி ஆண்டு இவ்வாண்டாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தற்போது, புதிய ரக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றம் தோன்றி உள்ளது. வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் அதேவேளை, அதன் பாதிப்பை குறத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை நனவாக்கி, சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி, வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தேவையை உத்தரவாதம் செய்து, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமைக் கொள்கையை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதில், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை வலுப்படுத்துவதோடு, சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கு உதவி வழங்கி வர்த்தக நிதி ஆதரவை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதி கடன் காப்புறுதியின் பங்கினை வெளிக்கொணர வேண்டும். அத்துடன், சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு, வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு சிறந்த சர்வதேச சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு முதலீட்டு ஆக்கப் பணிகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, வெளிநாட்டு முதலீட்டுச் சட்டத்தையும் தொடர்புடைய சட்ட விதிகளையும் செவ்வனே செயல்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், உள்நாட்டுத் தேவையை ஆக்கமுடன் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்