கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான இயக்க முறைமை பற்றிய செய்தியாளர் கூட்டம்

2020-02-14 20:01:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான சீன அரசவையின் இயக்க முறைமை தொடர்பாக, செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இதில், சீனத் தேசிய சுகாதார ஆணையம், சீன நிதி அமைச்சகம், சீன மனிதவள மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம், மத்திய வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுக்கான விரிவான கொள்கைகளையும் நடவடிக்களையும் விவரித்துள்ளனர்.

அப்போது, சீனத் தேசிய சுகாதார ஆணையத் துணைத் தலைவர் செங் யீ சின் கூறுகையில்,

உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தவிர, மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட நோயாளிகள் என்ற எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நோயாளிகள் கூடியவிரைவில் சிகிச்சை பெறுவர். இந்நிலையில் நோயாளிகள் குணமடையும் சாத்தியம் அதிகம் என்று தெரிவித்தார்.

இந்த முயற்சி குறித்து சீனத் தேசிய சுகாதார ஆணையச் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் கூறுகையில்,

ஹுபெய் மாநிலத்தில், மருத்துவரீதியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உறுதி செய்யும் புதிய முறைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்துள்ளதோடு, இச்செயல், நோயாளிகள் விரைவாக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு என்றும் கருகிறது என்று கூறினார்.

இந்த புதிய முறையால் தான், 12ஆம் நாளில், ஹுபெய் மாநிலத்தில் புதிதாக பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது என்றும் மி ஃபெங் குறிப்பிட்டார்.

தற்போது நாடளவில், நோய் தடுப்புப் பணி மிகவும் முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. வைரஸ் ஒழிப்புப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, மருத்துவப் பணியாளர்களின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது, முக்கிய ஆதாரமாகும். இதற்காக தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு பணிச் சூழலை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு அமைச்சகங்கள் 7அம்ச நடவடிக்கைளை அறிவித்துள்ளன என்று செங் யீ சென் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், சீன நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில்

நோயைக் கட்டுப்படுத்துவதற்கு 8000கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோய் தடுப்புக்கான அத்தியாவசப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும், நோயினால் இன்னல்களைச் சந்தித்துள்ள தொழில் நிறுவனங்களின் சுமையைத் தீர்ப்பதர்கு உதவி அளிக்கும் வகையிலும், நிதி அமைச்சகம் விரைவில் வரி மற்றும் கட்டணம் தொடர்பான 9 அம்ச நடவடிக்கைகளை வெளியிடவுள்ளது என்று தெரிவித்துள்ளன.

இக்கூட்டத்தில், சீன மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகத்தின் அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்குவதற்கு ஆதரவு அளிக்கும் விதமான கொள்கைகளை விவரித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்