கடும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறையை முழுமைப்படுத்த வேண்டு:ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்

சரஸ்வதி 2020-02-14 20:15:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சீர்திருத்தத்தை விரிவாக ஆழமாக்கும் ஆணையத்தின் 12ஆவது கூட்டம் பிப்ரவரி திங்கள் 14ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதற்குத் தலைமை தாங்கி முக்கிய உரைநிகழ்த்தினார். பொது மக்களின் உயிர் மற்றும் உடல் நலத்துக்கு உத்தரவாதம் அளிப்பது என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டை நிர்வாகிப்பதில் முக்கியக் கடமையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமை என்ற அடிப்படையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணியை அறிவியல்பூர்வமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள வேண்டும். அதோடு, நீண்டகாலத்தைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அனுபவங்களைத் தொகுத்து, படிப்பினை பெற்று, கடும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறையை முழுமைப்படுத்தி, தேசிய பொது சுகாதார அவசர நிலை மேலாண்மை அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்