​கரோனா வைரஸ் சிகிச்சையில் சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் பயன்கள் குறித்து சீனா பகிர்வு

தேன்மொழி 2020-03-20 10:49:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், கரோனா வைரஸ் சிகிச்சையில் சீனப் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகளால் கிடைத்த பயன்கள் மற்றும் அனுப்பவங்கள் குறித்து சீனப் பொறியியல் கழக மூத்த அறிஞர் ட்சாங் போலீ உள்ளிட்ட சீனப் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள் துறை நிபுணர்கள், மார்ச் 18-ஆம் நாள் இரவு வுஹான் நகரில், அமெரிக்க நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சீன நிபுணர்கள் கூறுகையில்,

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், சீனப் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, நல்ல பலன் பெறலாம் என்று கூறினர்.

சீன மருத்துவ அறிஞர்கள், சர்வதேச மருத்துவ அறிஞர்களுக்கு கரோனா வைரஸை எதிர்த்து போராடும் அனுவபங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக, சிஜிடிஎன் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில், பலமுறை இத்தகையகாணொலிக் காட்சிக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்