அமெரிக்க அரசிலிருந்து உதவி கிடைக்கவில்லை:சீனா

​வாணி 2020-03-21 16:16:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்குச் சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள் உதவிகளை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் பல முறை தெரிவித்திருந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில்,

அமெரிக்க அரசின் சார்பில் வழங்கிய நிதியுதவியோ பொருள் உதவியோ சீனாவுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் துவங்கிய பிறகு அமெரிக்காவிலுள்ள பல நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும், தனிநபர்களும் சீனாவுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கினர். தற்போது, அமெரிக்காவில் வைரஸ் பரவல் நிலைமை மோசமாகி வரும் போது சீன மக்களும் அமெரிக்காவுக்கு உதவி வழங்கி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

தவிரவும், முகமூடி, பாதுகாப்புக்கவச ஆடை உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனாவுக்கு உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க சர்வதேச வளர்ச்சி பணியகம் தெரிவித்திருந்தது. ஆனால், இப்பொருட்கள் மார்ச் 11ஆம் நாளே தயாராக இருந்தது. தற்போது சீனாவில் நோய் பரவல் ஏற்கனவே கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க தரப்புக்கு உணர்வுப்பூர்வமான நன்றி தெரிவித்ததோடு, இப்பொருட்கள் தேவைப்படும் இதர நாடுகளுக்கு வழங்கலாம் என்று சீனா தெரிவித்ததாக கெங் சுவாங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்