நச்சு எங்கே உள்ளது?

வாணி 2020-03-25 20:11:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவிலிருந்து வரும் பொருட்களில் வைரஸ் உள்ளது என்பதை சில மேலை நாடுகளைச் சேரந்தவர்கள் பரப்பி செய்து வருகின்றனர்.

தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் எனும் இதழ் அண்மையில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, புதிய கரோனா வைரஸ் வேறுபட்ட பொருட்களின் மேற்பரப்பில் வாழும் காலம் வேறுப்பட்டது. அதிகபட்சமாக, பிலாஸ்டிக் மற்றும் இரும்புக் கம்பிகளி மேற்பரப்பில் இது 72 மணிநேரம் வாழ முடியும். அதாவது தேவையான நச்சு நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பொருட்களிலிருந்து வைரஸ் பரவுவதும் தடுக்கப்படும்.

தற்போது, 180க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கவச ஆடை மற்றும் முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நாடாக சீனா திகழ்கின்றது. உள்நாட்டுத் தேவையை நிறைவேற்றும் அதேவேளையில், தற்போது சீனா இயன்ற அளவில் வெளிநாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் உதவி செய்து வருகின்றது. பாகிஸ்தான், ஈரான், தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஆப்பிரிக்க நாடுகள் முதலியவற்றுக்கு சீனா மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது.

நோய் என்ற மனிதர்களின் பொது எதிரியைச் சமாளிக்க ஒத்துழைப்பே முக்கியம். நச்சுப் பார்வையுடன் உலகை மதிப்பிடுபவர்கள் அதனாலேயே கடுமையாகப் பாதிக்கப்படுவர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்