ஜி-20 உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் உரை

வாணி 2020-03-26 22:48:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய் தடுப்பு பற்றிய ஜி-20 அமைப்பின் சிறப்பு உச்சிமாநாடு 26ஆம் நாளிரவு காணொளி மூலம் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், தற்போது கொவைட்-19 நோய் உலகளவில் பரவி வருகின்றது. இந்நிலையில், உலக நாடுகள் மனவுறுதியுடன் சர்வதேச ஒத்துழைப்பைப் பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் என்ற கருத்துடன், வைரஸ் பரவல் தடுப்பு அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, மருந்து மற்றும் தடுப்பூசி ஆய்வைக் கூட்டாக மேற்கொள்ளவும், நோய் பரவியுள்ள நாடுகளுக்கு இயன்ற அளவில் உதவி அளிக்கவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சிக்கலுக்குள்ளாகியிருந்த சீனாவுக்குப் பல நாடுகள் உதவிகளையும் இதயப்பூர்வமான ஆதரவையும் அளித்தன. இந்த நட்புறவைச் சீனா மனதில் பேணிமதிக்கின்றது. நோய் பரவல் மனதரின் பொது எதிரி. கொவைட்-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தகவல்கள் தொடர்பான இணையத்தளத்தைச் சீனா நிறுவியுள்ளது. இதனை உலகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.

மேலும், கரோனா வைரஸ் பரவல் உலக உற்பத்தி மற்றும் தேவைத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் தவிர்க்கும் விதம் பல்வேறு நாடுகள் ஒட்டுமொத்த கொள்கை என்ற ரீதியில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயன் தரும் நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை மேற்கொண்டு, நிதித் துறையின் மீதான கண்காணிப்பை ஒருங்கிணைத்து உலகத் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிலைத் தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் முன்மொழிந்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்