கொவைட்-19 தடுப்பில் சீனாவும் அமெரிக்காவும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும்

வாணி 2020-03-27 21:03:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, கொவைட்-19 தடுப்பில் சீனாவும் அமெரிக்காவும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டோனால்ட் டிரம்புடன் 27ஆம் நாள் தொலைபேசி தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

ஒருபுறம், அமெரிக்காவில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகின்றது. 26ஆம் நாள் பிற்பகல் 82 ஆயிரத்தைத் தாண்டியது. அமெரிக்கா உலகில் மிக அதிக கொவைட்-19 நோயாளிகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

மறுபுறம், நோய் தடுப்பில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சில அமெரிக்க அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தூற்றி வருவது, இரு நாட்டுறவுக்கும் உலகளவில் நோய் தடுப்புப் பணிக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பது பற்றிய தகவல்களையும் அனுபவங்களையும் அமெரிக்காவுடன் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டு இயன்ற அளவில் அமெரிக்காவுக்கு உதவி செய்ய சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்துள்ளார். மனிதநேய எழுச்சி மற்றும் மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் என்ற சீனாவின் கருத்தை இது சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

ஒத்துழைப்பு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயன் தரும். மாறாக, ஒன்றுக்கு ஒன்று எதிராகச் செயல்பட்டால் இரு தரப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தற்போது அமெரிக்காவில் மருத்துவப் பொருட்கள்பற்றாகுறை நிலவி வரும் நிலையில், சீனாவிலிருந்து அவசரமாக தேவைப்படும் மருத்துவ பொருட்களை இறக்குமதி செய்தால், பல அமெரிக்கர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

நோய் பரவி வரும் அறைகூவலை எதிர்கொண்டு, இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்வது உலகச் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் செயலாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்