உயிருக்குக் கடும் முக்கியத்துவம் அளிக்க: சீனாவின் அனுபவம்

இலக்கியா 2020-04-19 15:01:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நெருக்கடியைச் சமாளிக்கும் காலத்தில், உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு நாடு மற்றும் சமூகத்தின் மனதிடம், செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கான சோதனையாகும். சீனாவின் வூ ஹான் நகரில் ஏப்ரல் 18ஆம் நாள் வரை கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 109 ஆகக் குறைந்தது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.

சீனத் தேசியச் சுகாதார ஆணையத்தின் தகவலின்படி, வூ ஹானில் பாதிக்கப்பட்டவர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட 2500 பேரில் 70 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். இவர்களில் 100 வயதை எட்டியவர்கள் 7 பேர் ஆவர். முதியோருக்கு உயர் தரத்தில் சிகிச்சை அளிப்பது, மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனாவின் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல் 6ஆம் நாள் வரை, கொவைட்-19 நோய் தொற்று இருப்பவர்களில் ஒருவருக்கான சராசரி சிகிச்சைக் கட்டணம் 21 இலட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. மருத்துவக் காப்பீட்டின்படி இக்கட்டணம் அரசால் செலுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பில் சீன அரசின் முயற்சிகள் குறித்து பிரிட்டனின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், நம்ப முடியாத கடினமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவது தான், இலட்சக் கணக்கான மக்களை, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்