மாண்டோரை வைத்து டிரம்ப் அரசியல்

இலக்கியா 2020-04-20 19:31:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெள்ளை மாளிகையின் நோய் நிலவரம் பற்றிய கூட்டத்தில் சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்து அறிவிக்கப்பட்டது என்று அமெரிக்க அரசுத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளேடு, இது தொடர்பாக வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சீனாவை வைரஸ் பரப்பியவர் என்று வர்ணிப்பது, கடினமான தேர்தலில் வெற்றி பெறும் தலைசிறந்த வழிமுறை என்று அமெரிக்கக் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலர் நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் இறுதியில் சயின்ஸ் என்ற இதழில் வெளியிட்டப்பட்ட ஒரு ஆய்வில், கொவைட்-19 நோய் பரவத் தொடங்கிய முதல் 50 நாட்களுக்குள், வூ ஹான் நகரம் முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டதால், சீனாவில் தொற்று விகிதம் 96 விழுக்காடு குறையத் துணை புரிந்தது. சீனா பயனுள்ள நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், இதற்காக அதிக விலை கொடுத்துள்ள நிலையில், நோயின் உயிரிழப்பு விகிதம், மதிப்பிப்பட்ட விகிதத்தை விட குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து நோயை அரசியலாக்கி, உயிரிழந்தோரை வைத்து அரசியல் செய்வது, அமெரிக்க மக்களின் வேதனையை தான் அதிகரிக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்