புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: உலக சுகாதார அமைப்பு

வாணி 2020-04-21 19:41:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்காவின் ஃபோக்ஸ் நியூஸ் 19ஆம் நாள் நிகழ்ச்சி ஒன்றில் கூறியது. இந்நிகழ்ச்சியில் வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் பாதுகாப்பு நிலை மிகவும் குறைவாகும் என்று நிபுணர் ஏன்று கூறப்படக்கூடிய ஒருவர் தெரிவித்தார். ஆனால், இந்த நிலை பற்றி அவர் எந்த ஒரு சான்றும் தெரிவிக்கவில்லை.

உண்மையில், வூஹான் வைரஸ் ஆய்வகம், அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளின் தொடர்புடைய ஆய்வகங்களுடன் நெருக்கமாக அறிவியல் ஆய்வுத் துறை ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அதன் சிறப்பு அம்சங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு இடமில்லை.

மேலும், இவ்வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கை முறையில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, சர்வதேச முக்கிய அறிவியல் துறையினர் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும் பல புகழ்பெற்ற நிபுணர்களும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்