நோய் தடுப்பில் அரசியல் செய்வது சரியல்ல - சீனா

​வாணி 2020-04-24 22:21:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் கடுமையாகி வருகிறது. ஆனால், மிசூரி மற்றும் மிசிசிபி மாநிலத்தின் ஆளுநர்கள் பயன் தரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக சீனாவின் மீது வழக்கு தொடுத்து கேலிக்கூத்தை அரங்கேற்ற முயன்றுள்ளனர்.

நோய் பரவலைக் கண்டறிந்தவுடனே சர்வதேச சுகாதார விதிகளின்படி உலக சுகாதார அமைப்பிடம் சீனா தகவல்களைத் தெரிவித்தது. தவிரவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொது சுகாதார அவசர சம்பவங்கள் தொடர்பான இரு தரப்பு உடன்படிக்கை எதுவும் இல்லை. இந்நிலையில் எந்த ஒரு தரப்பும் உடன்படிக்கையை மீறியதாகக் கருதப்பட முடியாது.

மேலும், எச்1என்1 காய்ச்சல் அமெரிக்காவிலிருந்து உலகிற்குப் பரவி, 2 இலட்சம் மக்களின் உயிரை பலி வாங்கியது குறித்து எந்த ஒரு நாடும் கப்பம் கட்ட வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரவில்லை.

தற்போது, நோய் தடுப்பில் அரசியல் செய்வதைக் கைவிட வேண்டும். உள்நாட்டு நோய் பரவல் நிலைமையைச் சமாளிக்க மேலதிக முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவிற்குச் சீனா அறிவுறுத்துகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்