தடுப்பூசி பற்றிய சந்தேகம்

வாணி 2020-05-16 20:10:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

73ஆவது உலக சுகாதார மாநாடு நடைபெறுவதற்கு முன், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர், பாகிஸ்தான் தலைமை அமைச்சர், பிரிட்டனின் முன்னாள் தலைமை அமைச்சர் உள்ளிட்ட 140க்கும் அதிகமான தலைவர்களும் நிபுணர்களும் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு, காப்புரிமை இல்லாமல் அதனை முழு உலகிற்கும் இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனைத்தவிர மற்றொரு செய்தியிலும் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனது தடுப்பூசி ஆய்விற்கு அமெரிக்கா மிக அதிக நிதி ஆதரவு அளித்துள்ளதால், இத் தடுப்பூசியின் பயன்பாட்டில் அமெரிக்காவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரான்ஸின் புகழ்பெற்ற மருந்தியல் நிறுவனமான சானொஃபி அண்மையில் தெரிவித்தது.

ஏப்ரல் திங்கள், கரோனா வைரஸின் பாதிப்பைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவின்படி பன்னாடுகள் நன்கொடைக்கான கூட்டம் ஒன்றை நடத்தின. இதில் தொடர்புடைய தடுப்பூசியின் ஆய்வு, உற்பத்தி மற்றும் நேர்மையான பகிர்வுக்காக மொத்தம் 740 கோடி யூரோ திரட்டப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா ஒரு டாலர் கூட வழங்கவில்லை.

சொந்த நாட்டில் கோடிக்கணக்கான டாலர் நிதியில் தடுப்பூசி ஆய்வில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. இது பற்றி அமெரிக்கா தற்சார்பாகப் பாடுபட்டு வருகிறது என்று நியூயார்க் டைமஸ் விமர்சித்துள்ளது.

இத்தகைய செயல்கள் முழு மனித குலத்துக்கும் இழைக்கப்படும். குற்றமாகவும் துரோகமும் அமையும் என்று லேன்செட் எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழின் தலைமைப் பதிப்பாசிரியர் லிசாட் ஹோடன் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்