சீனப் பொருளாதாரத்தின் சரி செய்து கொள்ளும் திறன்

வாணி 2020-05-20 20:49:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் தொற்று நிகழ்ந்தது முதல் இதுவரை, நிர்பந்தத்தைச் சமாளிக்கும் ஆற்றலையும் சுயமாக சரி செய்து கொள்ளும் திறனையும் சீனப் பொருளாதாரம் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலில் வெளியான ஒரு தொகுதி பொருளாதாரக் குறியீடுகள் சீனாவின் பொருளாதாரம் விரைவாக மீட்சி அடைந்து வருவதைக் காட்டுகின்றன.

ஏப்ரல் திங்களில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதித் தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தொழில் அடிப்படை, இசைவு ஆற்றல், மனித வளம் முதலியவை சீனாவின் மேம்பாடுகளாகும். தவிரவும், சீரான பொருள் புழக்க அமைப்புமுறை மற்றும் போக்குவரத்து வசதிகளும், பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்குத் துணை புரியும்.

ஆகவே, சீனச் சந்தை மீதான நம்பிக்கை மாறவில்லை. எடுத்துக்காட்டாக, தற்போது சீனாவுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் வணிக விமான போக்குவரத்து நெறியைத் துவக்க இரு நாடுகளின் அரசுகள் விவாதித்து வருகின்றன. ஜெர்மனியுடன் தொழில் சங்கிலியின் முழுமையையும் நிதானத்தையும் பேணிக்காக்க சீனா விரும்புவதாக சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லே யேட்சங் தெரிவித்தார். மேலும், சீனாவுக்கான முதலீட்டுத் தொகையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என கள ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 40 விழுக்காட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனாவின் பங்கு 30 விழுக்காட்டுக்கு மேல் இருந்து வருகின்றது. கரோனா வைரஸ் பாதிப்பை சீனா வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதுடன், பொருளாதாரமும் மீட்சி அடைந்து வருகின்றது. இது உலகப் பொருளாதாரத்துக்கு உயிராற்றல் ஊட்டுவது உறுதி.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இரு கூட்டத்தொடர்களில் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்காக மேலதிக முன்மொழிவுகள் முன்வைக்கப்படுவதை எதிர்பார்க்கின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்