வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்குவோம்: சீனா

இலக்கியா 2020-05-21 17:11:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் வறிய மக்கள் அனைவரையும் வறுமையிலிருந்து விடுவிக்க வைப்பது, கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு அளித்த வாக்குறுதி ஆகும். அது, திட்டப்படி நனவாக்கப்படும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெளிப்படையாகத் தெரிவித்தார். இவ்வாக்குறுதி, சீன மக்களின் வறுமை ஒழிப்புப் பணிக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

வறுமையை முழுமையாக அழிக்கும் விதமாக, சீன அரசு, கடைசி 52 வறுமை வட்டங்களுக்கு 3080 கோடி யுவான் உதவித் தொகை வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பில் வறிய மக்களின் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், சீன வறுமை ஒழிப்பின் முக்கிய பகுதியாகும். தொடர்புடைய கொள்கைகளின் உதவியுடன், தற்போது வறிய கிராமங்களிலிருந்து வெளியேறி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைப் போலவே 95.4 விழுக்காடு வகிக்கிறது. மேலும் அரசு, சுமார் 560 கோடி யுவான் ஒதுக்கீடு மூலமும், நோய் பரவலால் பாதிக்கப்பட்ட 3 இலட்சம் வறிய மக்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக வங்கியின் விவரங்களின்படி, சீனாவில் வறுமை குறைப்புப் பணி, உலக அளவிலான வறுமை குறைப்புக்கு 70 விழுக்காட்டுக்கு மேல் பங்கு ஆற்றி வருகிறது. இது குறித்து, பிரிட்டனின் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சீன ஆய்வகத் தலைவர் கேரி ப்ரான் கூறுகையில், சீனாவின் வறுமை ஒழிப்பு இலக்கு நனவாக்கப்படவுள்ளது. சீனா, உலகத்துடன் இணைந்து, தொடர வல்ல, நியாயமான, பரஸ்பர நலன் மற்றும் கூட்ட வெற்றி பெறும் சமூகத்தை உருவாக்கும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்