வறுமை ஒழிப்பில் பாரம்பரிய தேசிய இனப் பண்பாட்டுத் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம்:ஷிலிபிங்

ஜெயா 2020-05-22 15:03:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாரம்பரிய தேசிய இனப் பண்பாட்டுத் தொழில் நுட்பம், வறிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்குரிய முக்கிய ஆற்றலாக இருக்கும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி ஷிலிபிங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

8 ஆண்டு காலம் முயன்று மியாவ் இன பூத்தையல் வேலை பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ள அவர், 2008ஆம் ஆண்டின் இறுதியில், வேலை இழந்த பெண்கள், சொந்த ஊரில் வேலை வாய்ப்பற்ற பெண்கள், சொந்த ஊருக்குத் திரும்பி வேலை தேடும் பணியாளர்கள் ஆகியோரைத் திரட்டி, மியாவ் இன பூத்தையல் குழு ஒன்றை உருவாக்கினார். தற்போது அவர்கள் தயாரித்த மியாவ் இன பூத்தையல் பொருட்கள் 67 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பாரம்பரிய தேசிய இனப் பண்பாட்டுத் தொழில் நுட்பங்கள், குய்சோ மாநிலத்தில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்புகளைப் பெற உதவியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்