சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறவில்லை

பூங்கோதை 2020-05-22 16:24:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ஹே லீஃபொங் மே 22ஆம் நாள் முற்பகல் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், கரோனா வைரஸ் பரவல் சீனப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற போதிலும், தற்போது பொருளாதாரம் சீராக மீட்சி அடைந்து வருகின்றது என்றார்.

மேலும், ஏப்ரல் திங்களில், சீனத் தொழிற்துறையின் கூட்டு மதிப்பு 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொழிற்துறைக்குத் தேவையான மின்னாற்றல் அளவு 1.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. போக்குவரத்தும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அத்துடன், கரோனா வைரஸ் பரவல் பாதிப்பை சமாளிக்கும் விதம் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்களும் நிறுவனங்களும் சீராக வளர்ச்சியடைந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பொருளாதாரத்தின் சீரான தொடரவல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றும் திறமையும் நம்பிக்கையும் சீனாவுக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்