இவ்வாண்டு பல்வகை இலக்குகள் நிறைவேற்றப்படும்:சீனா நம்பிக்கை

வாணி 2020-05-22 21:46:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் அரசுப் பணியறிக்கை ஓராண்டில் சீனாவின் பொருளாதார மற்றும் கொள்கைகளின் போக்கு பற்றி அறிந்து கொள்வதற்குரிய முக்கிய வழிமுறையாகும். வெள்ளிக்கிழமை சீனத் தலைமை அமைச்சர் 13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடரின் துவக்க விழாவில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் முழு ஆண்டின் அதிகரிப்பு இலக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது. வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை வாழக்கை, வறுமை ஒழிப்பு, நுகர்வோர் விலைவாசி உள்ளிட்ட துறைகளில் ஒட்டுமொத்தமாக எவ்வாறு சரிசெய்வது என்பது இந்த அறிக்கையில் விவரமாக முன்வைக்கப்பட்டது.

ஆனாலும், நிதிக்கொள்கை, நாணயக் கொள்கை உள்ளிட்ட இதர வளர்ச்சி இலக்குகளிலிருந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்கு பற்றி அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நகரங்களில் 90 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். நுகர்வோர் விலைவாசி குறியீடு அதிகரிப்பு 3.5 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துதல், நடைமுறை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள கிராம வறிய மக்கள் அனைவரையும் வறிய வட்டங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட இலக்குகளை சீன அரசு வகுத்துள்ளது. இது பற்றி தி ஆஸ்திரேலியன் ஃபைனன்ஷல் லிவேயூ வெளியிட்ட கட்டுரையில், பொருளாதார வளர்ச்சி இலக்கு வகுப்பதன் வழக்கத்தைச் சீனா கடைபிடிக்கவில்லை. மாறாக, வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலைமையைச் சமாளிக்கும் போது உயிருக்கு முதலுரிமை வழங்குவதில் சீன அரசு ஊன்றி நின்று வருகின்றது. நோய் பாதிப்பைக் கூடிய அளவில் குறைக்கும் வகையில் இந்த அறிக்கையில் குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தரமான வெளிநாட்டுத் திறப்புக்கொள்கையை சீனா கடைபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக விநியோகச் சங்கிலியைப் பேணிக்காக்கும் சீனாவின் இம்முயற்சி உலகிற்கான ஒரு முக்கிய உத்தரவாதமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்