சீனாவின் வூ ஹான் நகரில் சுமார் 1 கோடி நியூக்ளிக் அமில சோதனை

பூங்கோதை 2020-06-02 18:53:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் செய்திப் பணியகம் ஜூன் 2ஆம் நாள் பிற்பகல், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி பற்றிய 104வது செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

மே 14 முதல் ஜூன் முதல் நாள் வரை, வூ ஹான் நகரில் 98 லட்சத்து 99 ஆயிரத்து 828 பேரிடம் நியூக்ளிக் அமிலச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, கரோனா வைரஸால் பாதிக்கப்படோர் எவரும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் இல்லாத நோய் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 300 ஆகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நியூக்ளிக் அமிலச் சோதனையின் முழு செலவு சுமார் 900 கோடி ரூபாய் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்