வெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானம் பற்றிய கலந்துரையாடல்

சிவகாமி 2020-06-29 10:22:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானம் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்துக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமையமைச்சருமான லீ கெச்சியாங் 28ஆம் நாள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தற்போதைய வெளிநாட்டு வர்த்தகம் பற்றிய நிலைமையைச் சீன வணிக அமைச்சகமும், சீனச் சுங்கத் துறைத் தலைமைப் பணியகமும் எடுத்துரைத்தன. அதன் பின் பேசிய லீ கெச்சியாங்,  தொழில் நிறுவனங்கள் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து தொடர்புடைய வாரியங்கள் உணர்வுப்பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு,  தொழில் நிறுவனங்களின் இன்னல்களைச் சமாளிக்க உதவியளிக்க வேண்டுமென  கோரிக்கை விடுத்தார்.

வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதன் வழி தயாரிப்புத் தொழில் திறப்பை ஆழமாக்குதல், சேவைத் தொழிலைக் குறிப்பாக உயர் நிலைச் சேவைத் தொழிலின் திறப்பை விரிவாக்குதல், வர்த்தகச் சூழலை மேலும் மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கையை முன்னேற்றுதல் ஆகிய பணிகளின் மூலம் தொழிற்துறை மற்றும் வினியோகச் சங்கிலியின் நிதானத்தை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்