ஹைனான் மாநிலத்தின் விருந்தினர் விடுதித் தொழில் வளர்ச்சி

சிவகாமி 2020-06-29 11:00:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டான் ட்சொங் சியன் என்பவர் ஹைனான் மாநிலத்தின் சன்யா நகரின் போஹூ ஊரினைச் சேர்ந்தவராவார். 2013ஆம் ஆண்டு முதல் உள்ளூர் அரசு இவ்வூரில் விருந்தினர் விடுதித் தொழிலை வளர்த்து வருவதால், இத்தொழில் ஊரின் முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. உள்ளூர் அரசின் ஆதரவுடன் இந்த வாய்ப்பைக் கைப்பற்றிய டான் ட்சொங்சியன் ‘’ஹைனான் ஜியே’’ எனப்படும் விருந்தினர் விடுதி ஒன்றை உருவாக்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் உள்ளூர் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ள இவ்விடுதி அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால், டான் ட்சொங்சியனின் வருமானம் அதிகரித்து வருகின்றது.

உள்ளூர் அரசின் முயற்சி மற்றும் பல்லாண்டு கால வளர்ச்சியின் மூலம், உள்ளூர் மக்களின் தனிநபர் வருமானம், 2016ஆம் ஆண்டில் இருந்த 9700 யுவானிலிருந்து 2019ஆம் ஆண்டில் 24 ஆயிரத்து 500 யுவானாக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்