கிராமவாசிகள் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி செய்யும் இளம் ஊழியர்

2020-06-29 15:10:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிகளில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இந்த இளைஞர்களில், அன்ஹுய் மாநிலத்தின் ச்சுசோ மாவட்டத்திலுள்ள சிகாங் கிராமத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளர் வாங் மெங்மெங் ஒருவர் ஆவார்.

2013ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள், ஹெஃபெய் தொழில் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் துறையிலிருந்து பட்டம் பெற்ற அவர், பெரிய நகரில் தங்கி வளர்வதற்குரிய வாய்ப்பைக் கைவிட்டு,  கடந்த 7 ஆண்டுகளாக சுய தொழில் நடத்துதல் மற்றும் தொழில் மூலம் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு, கிராமவாசிகள் செல்வமடைவதற்குத் தலைமை தாங்கி வருகிறார்.

கொவைட்-19 நோய் ஏற்பட்ட பிறகு, வசந்த விழா விடுமுறையைக் கொண்டாடாமல் வாங் மெங்மெங் கிராமத்துக்கு விரைந்து சென்று, நோய் தடுப்புப் பணியிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு காப்புறுதி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டார். கிராம ஊழியர்கள் மற்றும் அவரின் முயற்சிகளுடன், இக்கிராமத்தில் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், சிகாங் கிராமத்தைச் சேர்ந்த 135 வறிய குடும்பங்கள் அனைத்தும் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளன. நவீன வேளாண் துறையை மேடையாகக் கொண்டு, கிராமிய சுற்றுலாத் துறையை வளர்த்து, வறுமை ஒழிப்புப் பணியின் பயன்களை மேம்படுத்துவது என்பது அவரின் வருங்காலத் திட்டமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்