ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் நிறைவேற்றம்

சிவகாமி 2020-07-01 09:53:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி 30ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம் ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டத்துக்கு முழுமையான ஆதரவை அளித்து வரும் ஹாங்காங்கின் பல்வேறு சமூகத்தினர், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக ஒழுங்கை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹாங்காங் நிர்வாக அதிகாரி கேரி லாம், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், சீன மக்கள் குடியரசிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் வளர்ச்சி நலனையும் பேணிக்காப்பது, இப்பிரதேசத்தின் கடமையாகும் என்று கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கி, ஹாங்காங்கில் நிகழ்ந்து வரும் வன்முறைச் செயல்களால், சமூகம் மற்றும் சட்டத் துறை ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் “ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையும் சீர்குலைக்குப்பட்டுள்ளதாகச் சீனப் பொறியியல் கழகத்தின் மூத்தஅறிஞர் சென் ச்சிங் சுவான் தெரிவித்துள்ளார்.  ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் உருவாக்கம், ஹாங்காங், சர்வதேச அறிவியல் மற்றும் புத்தாக்க மையமாக மாறத் துணை புரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை முழுமையாக ஆதரிப்பதாக ஹாங்காங்கின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஜனநாயகக் கூட்டணியின் சட்டக்குழு உறுப்பினர் கே ச்சுவன்ஷெங் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் மருத்துவப் பணியாளர்கள் சங்கமும் இச்சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, தொடர்புடைய சட்ட விதிகள், ஹாங்காங்கில் நடைமுறைக்கு வருவதை முழுமையாக ஆதரித்துள்ளது.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்