சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கை அதிகரிப்பது முக்கியம்

வாணி 2020-07-27 11:28:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவும் இந்தியாவும் ஆசியாவின் மிகப் பெரிய இரு வளரும் நாடுகளாகும். இவ்விரு நாடுகளின் உறவின் வளர்ச்சிப் பாதையில் அவ்வபோது சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. அதற்கான காரணம் என்ன?

ஏகாதிபத்தியத்திலிருந்து பெரும் முயற்சியுடன் தங்களை விடுவித்துக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கிடையிலான பண்பாடு மற்றும் வரலாறுகள் வித்தியாசமானவை. குறிப்பாக உலகின் மீதான கருத்துக்களும், ஒன்றின் ஒன்று மீதான மதிப்பீடுகளும் வேறுபட்டவை. இவை இரு தரப்பு ஒத்துழைப்புகளில் தடையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இரு தரப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவது மிக முக்கியமானது. யானையும் டிராகனும் என்பதற்குப் பதிலாகப் புயல் மழையை எதிர்நோக்கும் இரு பெரிய மரங்களைப் போல் இரு நாடுகள் இருக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனர்களின் தத்துவம் மற்றும் கலாச்சாரத்தின்படி, குழுவின் பொது வளர்ச்சியினால் மட்டுமே, அதன் தனி உறுப்புகள் ஒவ்வொன்றின் செழுமையையும் உத்தரவாதம் செய்ய முடியும். அதன் அடிப்படையில் தான், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைச் சீனா முன்வைத்துள்ளது. அதே அடிப்படையிலேயே, சர்வதேச மேடையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பிற்குச் சீனா மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது.

தற்போது இந்தியாவில் சீனத் தயாரிப்புகளை ஒடுக்கும் நிகழ்வுகள் காணப்படுகின்றன. சீன நிறுவனங்களையும் கடைகளையும் மூடுவதன் காரணமாக பல இந்திய மக்கள் வேலை வாய்ப்புளை இழந்துள்ளனர். இதனால், இரு தரப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முயன்று வரும் இந்தியாவின் வணிகச் சூழலும் பாதிக்கப்படும்.

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இரு தரப்புகளுக்கிடையிலான பல சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். அவ்வாறு தீர்வு காணப்படும் நிலையில் சீனாவும் இந்தியாவும் சகோதரர்களைப் போலக் கூட்டாக வளர்ச்சி பெறுவது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்