21ஆவது நூற்றாண்டு என்பது சித்தாந்த எதிர்ப்புக்கான காலம் அல்ல

வாணி 2020-07-28 11:52:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு ஆணையத்தின் தலைவர் ஹாஸ் அண்மையில் தனது சுட்டுரைப் பக்கத்திலும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையிலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ சில நாட்களுக்கு முன் நிக்சன் நூலகத்தில் வழங்கிய உரையைக் கண்டித்துள்ளார். அதில், பாம்பியோவின் உரை வரலாற்றைத் திரித்துப் பேசியதுடன் தற்கால உலகில் மிக முக்கியமான இரு தரப்புறவுக்குச் சாத்தியமற்ற பொருத்தமற்ற கொள்கையையும் முன்வைத்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

40 ஆண்டு கால சீன - அமெரிக்க உறவை பாம்பியோ முற்றிலும் நிராகரித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கி, சீனாவைப் பன்முகங்களிலும் மட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார். பாம்பியோவின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தொலை நோக்குடையவர்களிடையில் கண்டிப்பு எழுந்திருந்தது.

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு அறிக்கையின்படி, சீன மக்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் மனநிறைவு விகிதாசாரம் 93 விழுக்காட்டுக்கு மேலாகும். அதைப்போல் புகழ்பெற்ற அமெரிக்க எடுல்மேன் உலகளாவிய பொது உறவு நிறுவனம் வெளியிட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பு தரவரிசையில் சீன அரசு தனது நாட்டு மக்களிடையில் 95 விழுக்காட்டு நம்பிக்கையைப் பெற்று முதலிடத்தில் வகிக்கின்றது. ஆனால் அமெரிக்க அரசோ தன்நாட்டு மக்களிடம் 48 விழுக்காட்டு ஆதரவினை மட்டுமே பெற்று கீழ் நிலையிலிருந்து 2 ஆம் இடத்தில் உள்ளது.

இந்த நிலையிலேயே பாம்பியோ சீன எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்க முயன்று வருகின்றார். ஆனால், 21ஆவது நூற்றாண்டு என்பது சித்தாந்த எதிர்ப்புக்கான காலம் அல்ல. அதோடு, இன்றைய உலகின் முக்கியப்போக்காக உள்ள உலக மயமாக்கப் போக்கும் தடுக்கப்பட முடியாத ஒன்று.

அமெரிக்காவால் சீனாவை மாற்றம் செய்ய முடியாது. சீனா அமெரிக்காவை மாற்றம் செய்ய விரும்பவில்லை. இப்பின்னணியில், இருநாடுகளும் சமநிலையில் பழகி, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது மட்டுமே சீன-அமெரிக்க உறவு சீராக வளர்வதற்கான அடிப்படையாக அமையும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்